தைப்பூசத்தில் வேண்டினால்! நிச்சயம் நடக்கும்! அனுபவத்தில் சொல்கிறேன்! துணை அமைச்சர் LIM HUI YING!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 1,

தைப்பூசத்தில் முழுமனத்துடன் வேண்டுதலைச் செலுத்தினால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் நிகழும் என மகளிர் சமூகக் குடும்பநலத் துணை அமைச்சர் LIM HUI YING தெரிவித்தார். என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். என்னுடைய வேண்டுதலைத் தைப்பூசத்தில் நிறைவேற்றியிருக்கிறேன்.


தேங்காய்களை உடைத்து என்னுடைய காணிக்கையைச் செலுத்தியிருக்கிறேன். அப்படியானால் நான் வேண்டியது நடந்திருக்கிறது. என்னுடைய வேண்டுதலை முருகன் நிறைவேற்றியிருக்கிறார். இப்போது என்னுடைய காணிக்கையைத் தேங்காய்களை உடைத்து செலுத்துகிறேன் என துணை அமைச்சர் LIM HUI YING தெரிவித்தார்.


பினாங்கு மாநில அரசாங்கம் தைப்பூசத் திருவிழாவை நம் மாநிலத்தின் ஒரு நிகழ்ச்சியாகவே கருதுகிறது என்றும் சமய நெறியுடன் தைப்பூசத்தைக் கொண்டாடுவதில் பினாங்கு மாநில அரசு உறுதியுடன் இருப்பது போல பிரதமர் அன்வார் தலைமையிலான மடானி அரசு அனைத்து வகையிலான ஆதரவையும் நல்கி வருவதாக LIM HUI YING தெரிவித்தார்.


பினாங்கு தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடவும் பக்தர்களுக்கு முழுமையாகப் பாதுகாப்பு அளித்திருக்கும் காவல்துறைக்கும், முறையாகக் கட்டமைத்துள்ள தன்னார்வலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நானும் தைப்பூசப் பக்தராக நன்றியைத் தெரிவிப்பதாக LIM HUI YING தெரிவித்தார். முருகனின் அருளால் அனைவருக்கும் நலம், அமைதி, வளம் ஆகிய மூன்றும் நிறைவாகக் கிடைக்க வேண்டுவதாக மகளிர் சமூகக் குடும்பநலத் துணை அமைச்சர் LIM HUI YING தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *