லிவர்புலின் பரிதாப நிலை தொடர்கிறது: அன்பீல்டில் பிஎஸ்வியிடம் 1-4 என தோல்வி!

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

இங்கிலாந்து, நவ. 27-

அர்னே ஸ்லாட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு லிவர்புல் அணியின் சரிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிகாலை அன்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டச்சு கிளப் பிஎஸ்வி அணி 4-1 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமான வெற்றியைப் பதிவு செய்தது.

முதல் பாதியிலேயே இவான் பெரிசிச் அடித்த பெனால்டி கோலால் பிஎஸ்வி முன்னிலை பெற்றது. டொமினிக் சோபோஸ்லாய் சமநிலை தரும் கோலை அடித்த போதிலும், லிவர்புல் வீரர்களின் உத்வேகம் மீண்டும் உயரவில்லை. இரண்டாம் பாதியில் கூஸ் டில் ஒரு கோலும், கௌஹைப் டிரியூஷ் இரண்டு கோல்களும் அடித்து பிஎஸ்வி அணியை அபார வெற்றி பெறச் செய்தனர்.

கடந்த 12 போட்டிகளில் இது லிவர்புலின் ஒன்பதாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. 1953-54 சீசனுக்குப் பிறகு இவ்வளவு மோசமான தொடர் தோல்விகளை லிவர்பூல் சந்தித்ததில்லை. பிரீமியர் லீக் தற்போதைய சாம்பியனான இந்த அணி தற்போது பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *