கட்டுமானத் தளத்தில் கள்ள வணிகம்-அந்நிய ஆடவர்களின் அத்துமீறல் முறியடிப்பு!
- Muthu Kumar
- 31 Aug, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, ஆக. 31-
பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்திலுள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் உரிமமின்றி வணிகச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஓர் அந்நியக் கும்பலின் சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
இங்கு கட்டுமானத் தொழிலை மேற்கொண்டு வரும் தொழிலாளர்களுக்கு உணவு வகைகளையும், பானங்களையும் அவ்விடத்திலேயே ஒரு கூடாரம் அமைத்து, விற்பனை செய்து வந்த கும்பலின் செயல் அம்பலமானது.
சம்பந்தப்பட்ட கும்பல் எவ்வித உரிமமும் இல்லாது தங்கள் விருப்பம்போல் இங்கு வணிகத்தில் ஈடுபட்டு வந்ததை மாநகர் மன்றத்தின் கட்டாய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று காலையில் இங்கு சோதனை மேற்கொண்ட போது கண்டறிந்தனர்.அவ்வண்ணம் 1979ஆம் ஆண்டின் வணிக உரிம விதிகளின் சிறு சட்டங்களுக்கு உட்பட்டு, இக்கும்பலின் வணிகச் செயலை முறியடிக்கும் வகையில், அவர்களது வணிக உபகரணங்கள் யாவும் கூண்டோடு பறிமுதல் செய்யப்பட்ட அதே வேளையில், அங்கிருந்த விற்பனைக் கூடங்களும் தரைமட்டமாக் கப்பட்டன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



