அரிசித் தொழிலில் ஆதிக்கம் செலுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 5-

கலப்படம் மற்றும் கள்ள நடவடிக்கைகளுக்கு வழிகோலும் வகையில், அரிசி உற்பத்தித் துறையில் ஒரு சில பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் நிலவுவதாகக் கூறப்படுவது ஆதாரமற்றவை என்பது மைசிசி எனப்படும் மலேசிய போட்டி ஆணையம் நடத்திய நெல் மற்றும் அரிசி தொழில்கள் குறித்து பொதுவான ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் கூறினார்.

"அந்த ஆய்வின் அடிப்படையில், 2010ஆம் ஆண்டு போட்டிச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு முரணான எந்தவொரு போட்டி எதிர்ப்பு நடைமுறைகளையோ அல்லது எந்தவொரு சிக்கல்களையோ மைசிசி தரப்பு கண்டறியவில்லை." என்றார் அவர்.

கடந்தாண்டு டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற தேசிய உணவு பாதுகாப்பு கொள்கைக்கான அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட ஆய்வின் கண்டு பிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டதாக ஆர்தர் ஜோசப் குருப் நேற்று மேலவையில் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *