PTPTN கடன் பாக்கி 5 பில்லியன்! 4 லட்சம் பேர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 11 : தேசிய உயர்கல்வி நிதிக் கழகமான PTPTN-இடம் கடன் பெற்றவர்களில் மொத்தம் 400,000 பேர் எந்தக் கடனையும் திருப்பிச் செலுத்தாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளந்தாக உயர் கல்வித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சாம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.

மேற்கல்வியை முடித்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும், அவர்கள் அறவே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளதாகவும், இதனால், நிலுவையில் உள்ள கடன் பாக்கி 5 பில்லியன் ரிங்கிட்டை எட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பிரச்னையை எதிர்நோக்கும் நபர்களுக்கு, பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடன் பாக்கியை 100 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு என ஒரே நேரத்தில் கட்ட வேண்டும் என தாங்கள் சொல்லவில்லை என்றும், ஆனால், அவர்களால் இயன்ற அளவுக்கு தவணைப் பணமாக முறையாகக் கட்டி வந்தால் கூட போதுமானது ஆகும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள் என்று டாக்டர் சம்ரி தெரிவித்தார்!

Seramai 400,000 peminjam PTPTN dikenal pasti langsung tidak membuat bayaran balik pinjaman walaupun lebih 10 tahun tamat pengajian. Jumlah tunggakan mencecah RM5 bilion. Kemudahan bayaran disediakan dan bayaran ansuran tetap digalakkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *