தங்கச் சுரங்கம் அமைக்க கிளாந்தான் மக்களுக்கு மட்டுமே அனுமதி! – கிளாந்தான் அரசு!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 11,

கிளந்தானில் உள்ள தங்கச் சுரங்களுக்கான உரிமைகள் கிளாந்தான் வாழ் மக்களுக்கு மட்டுமே எனும் சட்டத்தைக் கிளந்தான் மாநில அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாகக் கிளாந்தான் மாநிலத் துணை முதலமைச்சர் Datuk Dr Mohamed Fadzli Hassan தெரிவித்தார். வெளி மாநிலத்தவர்களிடம் இருந்த சுரங்க உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மேலதிகமாக அவர்களின் கொள்முதல்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என Datuk Dr Mohamed Fadzli Hassan தெரிவித்தார்.

கிளாந்தான் மாநில அரசாங்கத்திடம் RM 50 மில்லியன் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கொண்டிருந்தாலும் கொள்முதல் செய்யப்பட்ட தங்கங்களை விடவும் இது மிகவும் குறைவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாந்தான் மாநிலத்தில் வாழும் மக்களுக்கு மட்டுமே கனிம வளங்கள் தொடர்பான குத்தகைகள் வழங்கப்பட வேண்டும் என்கிற அரசாங்கத்தின் கொள்கையைத் தங்கச் சுரங்கத்திலிருந்து தொடங்கவிருப்பதாகவும் இதனால் கிளந்தான்வாசிகளுக்கு மட்டுமே நிபந்தனையுடன் மாநில அரசு குத்தகைகளுக்கான உரிமத்தை வழங்கும் என Datuk Dr Mohamed Fadzli Hassan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *