எலான் மஸ்க்கின் Grok செயலிக்குத் தடை! - அரசு நடவடிக்கை
- Shan Siva
- 13 Jan, 2026
ஷா ஆலம், ஜன 13: அநாகரிகமான உள்ளடக்கங்கள், குறிப்பாக குழந்தைகள்
தொடர்பான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதன்
காரணமாக, X தளத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான
MCMC தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதனுடன்,
அந்த தளத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடான Grok மீது தற்காலிகத் தடை விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
X தரப்பிலிருந்து MCMC-க்கு
கிடைத்த விளக்கம் மிகவும்
போதியதாக இல்லாததும், மேலோட்டமானதும் எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த
நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ
ஃபாஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.
சுல்தான் சலாஹுதீன் அப்துல் அசீஸ் ஷா கட்டிடத்தில் உள்ள டேவான் ஜூப்லி பெராக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட பதில் மிகவும் திருப்திகரமற்றதாக
உள்ளது எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, Grok பயன்பாட்டுக்கு தற்காலிகத் தடை விதிக்கவும், சட்ட
நடவடிக்கை எடுக்கவும் அவர்
உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
இந்தத் தடை, AI மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை
கட்டுப்படுத்துவதற்கான போதுமான
பாதுகாப்பு நடைமுறைகள் Grok-இல்
இல்லாததை மையமாகக்
கொண்டுள்ளது.
Grok மீது விதிக்கப்பட்ட தடை எவ்வளவு காலம்
நீடிக்கும் என்பது, மலேசிய சட்டங்களை X எந்த அளவிற்கு பின்பற்றுகிறது என்பதையே முழுமையாக சார்ந்திருக்கும் என ஃபாஹ்மி
விளக்கினார்.
மேலும், Grok மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ள
நாடுகளில் மலேசியா
மட்டும் அல்ல என்றும், இந்தோனேசியா ஏற்கனவே அந்த பயன்பாட்டைத் தடை
செய்துள்ளதாகவும், இங்கிலாந்து இதே பிரச்சினையை ஆய்வு செய்து
வருவதாகவும் ஃபாஹ்மி தெரிவித்தார்.
AI பயன்பாட்டில் தேவையான பாதுகாப்பு
அம்சங்களை Grok வழங்கத் தவறியதைக் குறித்த உலகளாவிய கவலைகளை இது வெளிப்படுத்துகிறது என்றார்.
இதனிடையே, சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆன்லைன் பாதுகாப்புக் குழு (JKDT)
உடன் விரைவில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவின் இணைய சூழல், குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு, மேலும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



