ஜொகூரில் வெள்ளப் பெருக்கு! 33 குடும்பங்கள் பாதிப்பு!
- Shan Siva
- 04 Oct, 2025
ஜொகூர் பாரு, அக் 4: இன்று அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத்
தொடர்ந்து, ஜொகூர் பொந்தியானில்
உள்ள 33 குடும்பங்களைச் சேர்ந்த
மொத்தம் 107 பேர் தற்காலிக
நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த வெள்ளப் பெருக்கால்
கம்போங் மெலாயு ராயா, கம்போங் பாயா
எம்புன், கம்போங் பாக் கலிப்,
கம்போங் ஸ்ரீ மெனாந்தி மற்றும் கம்போங் மாஜு
ஜெயா ஆகிய கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை குழு தலைவரும்,
மாநில அரசு செயலாளருமான டத்தோ அஸ்மான் ஷா அப்த்
ரஹ்மான் கூறினார்.
தொடர் கனமழை
மற்றும் குனோங் பூலாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் வெள்ளத்திற்கு காரணம் என
முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும்,
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது தெளிவான
வானிலை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



