வடகிழக்கு பருவமழையால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு - மெட் மலேசியா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 11:

வடகிழக்கு பருவமழை பருவம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கும் நிலையில், இது வெள்ள அபாயம் ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கடும் மழை நீட்டிக்கலாம் என்று மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்தார்.கனத்த மழையின் காரணமாக ஆறுகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடலாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

வடகிழக்கு காற்றும் பலமாக வீசுவதோடு, கடல் கொந்தளிப்பு, தென் சீனக் கடலில் நீர் மட்ட உயர்வும் அதிகரிக்கும் என டாக்டர் முகமட் ஹிஷாம் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *