சபாவில் 22 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது!
- Shan Siva
- 12 Sep, 2025
கோத்தா கினபாலு, செப் 12: சபாவில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று
காலை 110 குடும்பங்களைச் சேர்ந்த 409 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று
இரவு 54 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் வெளியேற்றப்பட்டனர்.
பெனாம்பாங்கில் 255 பேர் வெளியேற்றப்பட்டதாகவும், பியூஃபோர்ட்டில் 154 பேர் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் மாநில பேரிடர்
மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் மொத்தம் 22 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன: பெனாம்பாங்கில் 14 கிராமங்களும், பியூஃபோர்ட்டில் எட்டு கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பெனாம்பாங்கின் கம்போங் சராபுங்கில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த 97 வயது முதியவரைத் தேடும் பணி, தொடர்ந்து நடைபெற்று வருவதாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



