சரவாக் பெலாகாவில் வெள்ளம்! மக்கள் அவதி

top-news
FREE WEBSITE AD

பெலாகா, செப் 9: சரவாக்கின் மத்தியப் பகுதியில் பெய்த கனமழையால் பெலாகா மாவட்டத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை தொடர்ந்த இடைவிடாத மழையால், அப்பகுதியில் ஒரு மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிகேஆரின் மத்திய தலைமைக் குழு உறுப்பினரும் செனட்டருமான அபுன் சுய் அனித் நிலைமை குறித்து கவலை தெரிவித்தார்.

உலு சுங்கை பெலாகாவைச் சேர்ந்த பல நீண்ட வீடுகள் மற்றும் ஆற்றங்கரையோர குடியிருப்புகள் நீரில் மூழ்கியிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

பல குடியிருப்புகள் தண்ணீர் சுழ்ந்து தத்தளிப்பதாகவும், பல கிராமப்புற சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ள நீர் காரணமாக கடந்து செல்ல முடியாமல் இருப்பதாகவும் அபுன் கூறினார்.

நிலம் மற்றும் நதிப் பயணத்திற்கு ஆபத்தான சூழ்நிலைகள் இருப்பதால், உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *