பேராக்கில் தொடர்ந்து மோசமடையும் வெள்ள நிலைமை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 24: பேராக்கில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, 759 குடும்பங்களைச் சேர்ந்த 2,171 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 22 தற்காலிக நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தைப்பிங்கில் உள்ள லாருட், மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டத்தில் உள்ள 19 தற்காலிக நிவாரண மையங்களில் தற்போது 1,784 குடியிருப்பாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

 மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் 387 குடியிருப்பாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் இரு மாவட்டங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சிவில் பாதுகாப்புப் படை மற்றும் சமூக நலத்துறை ஆகியவற்றால் மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *