சிங்கப்பூர்-மலேசியா பாலத்தில் விபத்துக்குள்ளான ராசாய TRELER லாரிகள்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 25,

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் இரண்டாவது பாலத்தில் இராசாயன லாரிகள் விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 5.41 மணிக்கு tuas பாலத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக  Iskandar Puteri மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Faiz Suleiman தெரிவித்தார். விபத்துக்குள்ளான இரு லாரிகளிலும் Propylene Glycol, Sodium Hypochlorite வகை இராசாயனங்கள் இருந்ததாகவும் Propylene Glycol ரசாயனத் தொட்டி முழுவதுமாகப் பாலத்திலிருந்து கடலில் விழுந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளோட்டியும் ஒரு லாரி ஓட்டுநரும் படுகாயம் அடைந்திருப்பதாகவும் இருவரும் ஜொகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடலில் விழுந்திருக்கும் Propylene Glycol ரசாயனத் தொட்டியை மீட்க மீட்புப் பணியாளர்கள் முயற்சித்து வருவதாகவும் கடலில் கவிழ்ந்த தொட்டியிலிருக்கும் ராசாயனம் இன்னும் கசியவில்லை என்பதை ஜொகூர் மாநிலச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை இயக்குநர் Dr Mohd Famey Yusoff உறுதிப்படுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *