லாரி மோதியதில் இளம் கணவர் பலி!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 4,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கில் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று காலை 10.35 மணிக்கு மலாக்காவின் Jalan Klebang Kecil சாலையில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக மத்திய மலாக்கா காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். செர்காம்மில் இருக்கும் தனது மனைவியைக் காண்பதற்காக விடுமுறையில் 26 வயது இளம் கணவர் பயணிக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சுங்கை ஊடாங்கிலிருந்து செர்காம் செல்லும் சாலையில் வேக வரம்பைச் சம்மந்தப்பட்ட லாரியும் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளும் மீறியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர் 26 வயது Muhammad Hilman Zulkifli என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் 33 வயதான லாரி ஓட்டுநர் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய மலாக்கா காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *