லாரியை மோதிய மோட்டார் சைக்கிள்! 18 வயது இளைஞர் பலி!
- Thinagaren Sanggaren
- 29 Aug, 2025
ஆகஸ்ட் 29,
கோலா லிப்பிஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 18 வயதான இளைஞர் உயிரிழந்ததுடன் 35 வயதான லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். நேற்று பிற்பகல் 1.40 மணிக்குக் கோலா லிப்பிஸிலிருந்து சுங்கை கோயான் செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகக் கோலா லிப்பிஸ் மாவட்டக் காவல் ஆணையர் Ismail Man தெரிவித்தார். உயிரிழந்தவர் 18 வயது உள்ளூர் இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Ismail Man உறுதிப்படுத்தினார்.
முன்னே சென்றுக்
கொண்டிருந்த வாகனத்தை முந்தும் போது எதிரில் வந்த லாரியை மோட்டார் சைக்கிள் மோதியதால்
இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மோட்டார்
சைக்கிளைத் தவிர்க்க முயற்சித்த லாரி, தடம் புரண்டு சாலையில் கவிழ்ந்ததால் 35 வயதான
லாரி ஓட்டுநர் படுகாயமடைந்திருப்பதாகவும் மேலதிக சிகிச்சைக்காக லிப்பிஸ் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கோலா லிப்பிஸ் மாவட்டக் காவல் ஆணையர் Ismail Man தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



