சாலையில் சிதறிய 1,000 லிட்டர் ரசாயன பீப்பாய்கள்!

top-news

ஜூன் 26,


ஆபாத்தான ரசாயன பீப்பாய்களைக் கொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் ரசாயனப் பீப்பாய்கள் சாலையில் சிதறியதால் Ayer Hitamமிலிருந்து வடக்கு தொற்கு நெடுஞ்சாலைக்குச் செல்லும் சாலை மூடப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் சாலையை மீண்டும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.41 மணிக்கு இச்சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் ரசாயனக் காப்பக அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Ayer Hitam மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Muhammad Syakir Jamal தெரிவித்தார்.


லாரியிலிருந்து 1000 லிட்டர் அளவுள்ள 3 பீப்பாய்கள் சாலையில் கவிழ்ந்ததால் பெரும் பதற்றமான சூழல் நிலவியதாகவும் உடனடியாகச் சம்மந்தப்பட்ட சாலையை மூடியதாக Ayer Hitam மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Muhammad Syakir Jamal தெரிவித்தார். இன்று அதிகாலை 3 மணி வரையில் ரசாயனக் காப்பக அதிகாரிகளால் சம்மந்தப்பட்ட சாலையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் காலை 7 மணிமுதல் சாலையைப் பயன்படுத்த முதன்மை வாகனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதாகவும் முழுமையானச் சோதனைக்குப் பின்னர் பிற்பகல் 3 மணிமுதல் அனைத்து வாகனங்களும் சாலையைப் பயன்படுத்தலாம் என Ayer Hitam மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Muhammad Syakir Jamal தெரிவித்தார்.


Lori yang membawa bahan kimia terbabas menyebabkan tiga tong 1,000 liter tumpah di jalan berhampiran Ayer Hitam. Jalan ditutup untuk pembersihan dan dibuka semula sepenuhnya kepada semua kenderaan pada jam 3 petang hari berikutnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *