வணிகத்தில் ஈடுபட்ட 38 வெளிநாட்டினர்கள் கைது! – தலைநகர்!
- Thinagaren Sanggaren
- 23 Sep, 2025
செப்டம்பர் 23,
தலைநகரின் பிரபல வணிகத் தலமான Lorong Haji Taib வணிகக் கடைகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வணிகத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 38 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammed Saupee Wan Yusoff தெரிவித்தார். நேற்று நண்பகல் நடத்தப்பட்ட முதல் சோதனையில் 27 வெளிநாட்டினர்கள் விசாரிக்கப்பட்டதாகவும் 12 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சோதனையின் போது சில வெளிநாட்டினர்கள் தப்பி ஓடியதாகக் கண்டறியப்பட்டதாக Wan Mohammed Saupee Wan Yusoff தெரிவித்தார்.
தப்பி ஓடிய
வெளிநாட்டினர்கள் நேற்று இரவு மீண்டும் அதே பகுதிக்குத் திரும்பி வந்து வணிகத்தைத்
தொடர்வதாக உள்ளூர் வணிகர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து மீண்டும் நேற்று இரவு 11 மணிக்கு
மற்றொரு சோதனை நடத்தப்பட்டதாக Wan
Mohammed Saupee Wan Yusoff தெரிவித்தார். இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
25 வெளிநாட்டினர்களும் அவர்களைப் பாதுகாத்து வந்த உள்ளூர்வாசி ஒருவரையும் கைதூ செய்திருப்பதாகக்
கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammed Saupee Wan Yusoff தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் Bangladesh, India, Pakistan, Indonesia, Nepal ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



