LOVE SCAM! ஜப்பான் பெண்ணிடம் RM200,000 இழந்த ஆடவர்!

top-news

ஜுன் 13,


முகநூல் மூலமாக அறிமுகமான ஜப்பான் பெண்ணிடம் RM200,000 இழந்துள்ளதாக 58 வயது ஆடவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட 58 வயது ஆடவர் கடந்த மாதம் ஜப்பான் பெண்ணுடன் முகநூலில் பழகியதாகவும் துருக்கியிலிருந்து தபால் மூலமாக ஒரு பொருள் ஜப்பானுக்கு அனுப்பவிருப்பதாகவும் அதற்கான வரி பணமாக RM200,000 கேட்டதும் 58 வயது வழங்கியிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட ஜப்பானில் உள்ள வங்கிக் கணக்கிற்கு தனது சேமிப்புப் பணமான RM200,000 தொகையை 50 பரிவர்த்தனைகள் மூலமாக அனுப்பியதாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். சம்மந்தப்பட்ட முகநூல் கணக்கு போலியானது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட ஜப்பான் வங்கிக் கணக்கின் மூலமாக விசாரணையை நடத்தி வருவதாக பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.


Seorang lelaki berusia 58 tahun kerugian RM200,000 selepas terpedaya dengan love scam melalui Facebook melibatkan seorang wanita Jepun. Mangsa membuat 50 transaksi ke akaun bank Jepun. Polis Pahang sedang menyiasat akaun terlibat yang disyaki palsu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *