KL – Kluang ETS3 ரயில் சேவை தொடக்கம்! மாமன்னர் ரயிலை இயக்கினார்!
- Shan Siva
- 23 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 23: கோலாலம்பூர் நிலையத்தில் தெற்கு வழித்தடத்திற்கான KTMB மின்சார ரயில் சேவையான ETS3 இன் தொடக்க விழாவை மாட்சிமை தங்கிய மாமன்னர் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
காலை 7.45 மணிக்கு நிலையத்திற்கு வந்த மாமன்னரை
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், துணை அமைச்சர் ஹஸ்பி ஹபிபுல்லா மற்றும் அரசாங்கத்தின் தலைமை செயலாளர் ஷம்சுல்
அஸ்ரி அபு பக்கர் ஆகியோர் வரவேற்றனர்.
ஜொகூரில் உள்ள
குளுவாங்கிற்கு பயணம் செய்வதற்காக, மணிக்கு 140 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய ETS3 ரயிலின் கட்டுப்பாட்டை சுல்தான் இப்ராஹிம்
தனிப்பட்ட முறையில் கையாண்டார்..
குளுவாங்கிற்கு
வந்த பிறகு, சுல்தான்
இப்ராஹிம், ஜெமாஸ்-ஜொகூர்
பாரு மின்சார இரட்டைப் பாதைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.8 கி.மீ பொது பூங்காவான மஹ்கோட்டா ரயில்
பூங்காவைத் திறந்து வைத்தார்.
2010 ஆம் ஆண்டில்,
சுல்தான் இப்ராஹிம் வரலாறு படைத்தார் மற்றும் 26 ஆம் வகுப்பு உயர் சக்தி கொண்ட லோகோமோட்டிவ்
ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கும் நாட்டின் முதல் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக
மலேசியா சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூரிலிருந்து ராவாங் வரை KTMB இன் ETS2 ஐ சோதனை ஓட்டத்தின்போது இயக்கினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



