பாராங்கத்தியுடன் கைகலப்பில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது! மூவர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 11 Jan, 2026
ஜனவரி 11,
சிரம்பானில் பாராங்கத்தியுடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒரு கும்பலைச் சேர்ந்த 6 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில் நேற்று Port Dickson Majistret நீதிமன்றத்தில் அவர்கள் 6 பேரும் குற்றமற்றவர்கள் என வாதிட்டு, நிதிமன்ற விசாரணையுடன் ஜாமின் கோரினர். கடந்த டிசம்பர் 27 Port Dickson-இல் உள்ள வணிகக் கடையின் முன், 3 உள்ளூர் ஆடவர்களை 6 பேர் கொண்ட கும்பல் பாராங்கத்தியால் சரமாரியாகத் தாக்கினர். முதற்கட்ட விசாரணையில் 21 முதல் 31 வயதுக்குற்பட்ட 6 உள்ளூர் இளைஞர்களைக் காவல்துறை கடந்த டிசம்பர் 29 கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சகோதரர்கள் என்றும், அனைவரும் லுகூட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. நேற்று Port Dickson Majistret நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி முதல் குற்றத்திற்குத் தலா RM 8,000 ரிங்கிட்டும் அடுத்த குற்றத்திற்குத் தலா RM 3,000 ரிங்கிட்டும் ஜாமின் வழங்கியதுடன் அடுத்த நீதிமன்ற விசாரணையை பிப்ரவரி 24 ஒத்தி வைத்தார். சம்பவத்தில் படுகாயம் அடைந்த 30 முதல் 36 வயதுடைய மூவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



