சட்டவிரோதப் பந்தயத்தால் ஏற்பட்ட விபத்து! இளம் பெண் படுகாயம்!
- Sangeetha K Loganathan
- 06 Jul, 2025
ஜூலை 6,
சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்ட வாகனம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை ஏற்படுத்திய 19 வயது இளைஞர் செலுத்திய PROTON SATRIA ரக வானகம் 18 வயது இளம் பெண்ணின் Perodua Axia வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகச் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார். இன்று அதிகாலை 2.50 மணிக்குச் சிரம்பானிலிருந்து Senawang செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
Perodua Axia வாகனத்திலிருந்த 18 வயது இளம்பெண் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் அவருடன் பயணித்த மேலும் நால்வர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் விபத்தை ஏற்படுத்திய 19 வயது PROTON SATRIA வாகனமோட்டி காயங்களின்றி தப்பிய நிலையில் அவரைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார். சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் கும்பலைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் விபத்தின் போது பதிவு செய்யப்பட்ட காணொலிகளின் மூலமாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
Seorang gadis berusia 18 tahun cedera parah selepas keretanya dirempuh Proton Satria dipandu remaja 19 tahun yang dipercayai terlibat dalam lumba haram di Seremban. Polis menahan pemandu terbabit dan memburu kumpulan perlumbaan lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



