PN-ஐ மறந்து ‘Rumah Bangsa’யில் இணையுங்கள்-BERSATU அழைப்பு
- Surendran Sumdraraj
- 02 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 2-
பெர்சத்து கட்சியின் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா மற்றும் அவரை ஆதரிக்கும் குழுவினரிடம், Perikatan Nasional (PN) கூட்டணியை மறந்து புதிய அரசியல் திசையைத் தேர்வு செய்யுமாறு BERSATU தகவல் பிரிவு தலைவர் டத்தோ துன் பைசல் அப்துல் அசீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர்கள் UMNO முன்வைத்த ‘Rumah Bangsa’ மற்றும் ‘Kolaborasi Agung’ முயற்சிகளில் இணைவது சிறந்தது என்றார்.
மேலும், அம்னோ தலைவர் மற்றும் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஷாயிட் அனுமதி அளித்தால், அடுத்த பொதுத் தேர்தல் (PRU-16)யிலும் அவர்களுடன் சேர்ந்து போட்டியிட முடியும் என்றும் குறிப்பிட்டார்.
“அகமட் சாஹிட் முன்னெடுத்துள்ள Rumah Bangsa முயற்சியில் சேருவது நல்லது. ‘Langkah Bangkok’ போன்ற அரசியல் முயற்சிகளில் நேரத்தை வீணாக்க வேண்டாம்,” என அவர் தெரிவித்தார்.
மேலும், ‘Geng SD’ (சத்தியப்பிரமாணக் குழு) ஆதரவாளர்களையும் இணைத்துக்கொண்டு, ஏற்கனவே உள்ள அரசியல் அமைப்பில் சேரலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



