போதையில் வாகனமோட்டிய 11 பேர் கைது! கிள்ளான் காவல்துறை நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 7,

கிள்ளான் காவல்துறையினர் முதன்மை சாலையில் மேற்கொண்ட சோதனையில் 11 வாகனமோட்டிகளைக் கைது செய்துள்ளனர். ஒரு பெண் உட்பட 10 ஆண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அனைவரும் மது போதையில் வாகனமோட்டிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தென் கிள்ளான் காவல்துறை தெரிவித்துள்ளது. கிள்ளானில் மதுபோதையில் ஆடவர் ஒருவர் செலுத்திய வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்த சம்பவத்தால் காவல்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனமோட்டினால் RM 10,000 முதல் RM 30,000 வரையில் அபராதமும் 2 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை தண்டனையும் 2 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிள்ளானில் உள்ள பல்வேறு முதன்மை சாலைகளில் போக்குவரத்து ஆணையத்துடன் காவல்துறையும் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் குடியிருப்புப் பகுதிகளில் குறிப்பாக நள்ளிரவுகளில் பொது இடங்களில் மது குடிக்கும் கும்பலையும் காவல்துறை கண்டித்து வருவதாகவும் கேளிக்கை மையங்கள் உள்ள சாலைகளில் இச்சோதனை நடவடிக்கை வாடிக்கையாக மேற்கொள்ளப்படும் என கிள்ளான் காவல்துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *