ஒவ்வொரு சட்டமன்றத்திலும் ஒரு MADANI Mart – மலிவு விலையில் பொருட்கள் திட்டம்
- Surendran Sumdraraj
- 22 Apr, 2026
புத்ராஜெயா, ஏப். 22-
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், MADANI Mart திட்டம் நாட்டின் ஒவ்வொரு Dewan Undangan Negeri (DUN) பகுதிக்கும் குறைந்தது ஒரு கிளையைத் திறக்க இலக்கு வைத்துள்ளது.
Yayasan Madani (MADANI Mart இயக்கம்) செயல்பாட்டு மேலாளர் லுட்பி முகமட் அரிபின், இந்த இலக்கு கட்டுப்பாடான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என்றார். மேலும் பொருட்கள் விநியோகத் தளத்தின் திறன் மற்றும் தயார்நிலையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், MADANI Mart திட்டம் முன்னாள் Kedai Rakyat 1Malaysia (KR1M) மாதிரியைப் பின்பற்றுவதில்லை என்றும், அந்த திட்டத்தின் தோல்வியை புதிய முயற்சியுடன் ஒப்பிடுவது நியாயமில்லை என்றும் அவர் விளக்கினார்.
“ஒவ்வொரு கடையும் தனிநபர் உரிமையிலும், அவர்களின் முதலீட்டிலும் இயங்கும். அரசு அல்லது ஒரு தனி நிறுவனத்தின் நிதி ஆதரவை சாராமல், தனியார் இயக்குநர்களின் முயற்சியிலேயே இந்த திட்டம் முன்னேறுகிறது,” என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



