அன்வாரால் மிரட்டப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! நாடாளுமன்றத்தை அன்வார் கலைப்பாரா? – மகாதீர் சவால்!

top-news
FREE WEBSITE AD

 ஆகஸ்ட் 2,

பிரதமராக இருக்கும் அன்வார் மேடைக்கு மேடைக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரும்படி கூவி வருகிறார், அன்வாருக்கு அவ்வளவு துணிச்சல் எப்படி வந்ததது என்றால் அவரிடம் ஆட்சி இருக்கிறது என்கிற அகங்காரம் என முன்னாள் பிரதமர் மகாதீர் சாடினார். நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருவது அவ்வளவு இலகுவானது இல்லை என மகாதீர் நினைவூட்டினார். அப்படி பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அன்வார் பதவியிலிருந்து விலகும் முன்னரே அவருக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்குவார் என மகாதீர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளை அன்வார் வெளியிட்டால் அது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருக்க அன்வாரை எதிர்க்கமாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்துள்ளார் என மகாதீர் தெரிவித்தார்நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதை அனைவரும் அறிவோம். அனைவரையும் காப்பாற்றுவது அன்வார் மட்டுமே. அவர்கள் சிறைக்குச் செல்லாமல் இருக்க அன்வார் பாதுக்காத்து வருகிறார் என்பதால் அன்வாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அன்வாருக்கு எதிராக அவர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என மகாதீர் உறுதியாகத் தெரிவித்தார்.

அன்வார் துணிச்சல் மிக்க தலைவராகத் தன்னை காட்டிக்கொள்கிறார். அப்படியெனில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை எதிர்கொள்ள அன்வார் தயாரா என மகாதீர் சவால்விடுத்தார். TURUN ANWAR பேரணியில் மிக குறைவான மக்களே பங்கேற்றதாக அன்வாரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார், அப்படியானால் மக்கள் ஆதரவிருக்கிறது என நம்பும் அன்வார் பொதுத்தேர்தலை இப்போது சந்திக்க தயாரா என மகாதீர் சவால் விடுத்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *