அன்வாரின் பொய் மூட்டைகள்! மகாதீர் கடும் சாடல்!

top-news


ஜூலை 5,

வெளிநாடு முதலீடுகள் குறித்து பிரதமர் Datuk Seri Anwar Ibrahim பொய்களைக் கட்டவிழ்த்து விடுவதாக முன்னாள் பிரதமர் Tun Mahathir Mohamad தெரிவித்துள்ளார். அன்வாரின் வெளிநாட்டுப் பயணங்களால் மலேசியாவுக்கு முதலீடுகள் குவிகிறது என மடானி அமைச்சர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் ஆனால் இதுவரையும் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் அதன் கிளைகளை மலேசியாவில் தொடங்கியதாகத் தெரியவில்லை என முன்னாள் பிரதமர் Tun Mahathir Mohamad தெரிவித்தார். 

இத்தாலியிலிருந்து RM 8.13 Billion மதிப்பிலான முதலீடுகளைப் பெற்றுள்ளதாக அன்வார் தெரிவித்துள்ளார். இன்னும் France , Brazil நாடுகளிலிருந்தும் எவ்வளவு முதலீடுகளைப் பெறுகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம் என முன்னாள் பிரதமர் Tun Mahathir Mohamad தெரிவித்தார். ஆனால் அன்வாரிடம் கடந்த 3 ஆண்டுகளில் RM 680 BILLION ரிங்கிட்டுக்கான முதலீடுகள் எங்கே எனும் கேள்வியை நாம் கேட்க கூடாது. அது எங்கே என்பது அன்வாருக்கு மட்டுமே வெளிச்சம். வெளிநாடுகள் மலேசியாவில் முதலீடுகள் செய்வதாக அன்வார் தெரிவிப்பதில் எந்தவோர் ஆதாரமும் இல்லை என்றும் முன்னாள் பிரதமர் Tun Mahathir Mohamad சாடினார்.


Tun Mahathir Mohamad menuduh Anwar Ibrahim menipu rakyat mengenai pelaburan asing. Beliau mendakwa tiada bukti syarikat luar membuka cawangan di Malaysia walaupun Anwar sering umum angka besar. Mahathir mempersoalkan keberadaan pelaburan RM680 bilion yang dijanjikan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *