அன்வார் நாட்டைக் கொள்ளையடிக்கவில்லை! நாட்டைக் கொலை செய்கிறார்! - மகாதீர் விலாசல்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 25,

பிரதமர் Datuk Seri Anwar Ibrahimக்கு எதிராக நாளை தலைநகரில் நடைபெறவிருக்கும் TURUN ANWAR பேரணியில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும் என முன்னாள் பிரதமர் TUN DR MAHATHIR MOHAMAD அழைப்பு விடுத்துள்ளார். இந்த TURUN ANWAR பேரணியில் யாரெல்லாம் பங்கேற்கலாம் எனும்படியானக் கேள்விகள் வலுத்து வருவதாகவும் அரசியல் லாபத்திற்காக எதிர்கட்சியினர் இந்த பேரணியை நடத்துவதாகவும் வெளிவரும் கருத்துகளைக் காதில் வாங்காமல், நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களும் நாளை பேரணியில் பங்கேற்கலாம் என முன்னாள் பிரதமர் TUN DR MAHATHIR MOHAMAD தெரிவித்தார்.

நாளை நடைபெறவிருக்கும் பேரணியில் மக்களுக்குத் தெரியாது ஒரு சில சம்பவங்களைத் தாம் வெளியிட போவதாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார். உண்மையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை நாடாளுமன்றத்தை வெல்லாத ஓர் அரசியல் கட்சி கூட்டணியில் ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்த பின்னர் இப்போது கூட்டணி இல்லாமலே பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது. அன்வார் தனது ஆட்சியைத் தற்காக்க திரைக்குப் பின்னால் செய்த சம்பவங்கள் ஏராளம் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தும் கடமை எனக்கு இருப்பதால் நான் நாளை நடைபெறவிருக்கும் TURUN ANWAR பேரணியில் கலந்துக் கொள்கிறேன். அன்வார் நாட்டைக் கொள்ளையடிக்கவில்லை, மாறாக அன்வார் நாட்டைக் கொலை செய்கிறார் என்கிற அரசியல் புரிதலை நாளை பேரணியில் தனது உரையில் விளக்கவிருப்பதாக முன்னாள் பிரதமர் TUN DR MAHATHIR MOHAMAD இன்று தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *