அம்னோவை அழிக்க நினைத்த மகாதீர் மலாய்க்காரர்களை வாழவைப்பாரா? Akmal Saleh கேள்வி!

- Sangeetha K Loganathan
- 07 Jun, 2025
ஜூன் 7,
முன்னாள் பிரதமர் மகாதீர் அம்னோவை அழிக்க வேண்டும் என தீவிரமாகச் செயல்பட்டதை யாராலும் மறுக்க முடியாது எனும்போது மகாதீர் தலைமையில் மலாய்க்காரர்கள் ஒன்றிணைவது சாத்தியமற்றது என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரும் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Dr Akmal Saleh தெரிவித்துள்ளார். மலேசியாவில் மலாய்க்காரர்களின் உரிமைகளை நிலைநாட்டிய அம்னோவை எதிர்த்தவரை எப்படி நம்புவது எனும் கேள்வியை Datuk Dr Akmal Saleh முன்வைத்துள்ளார்.
மகாதீர் அம்னோவால் பெரும் உச்சத்தை அடைந்தவர். மகாதீரின் இப்போதைய புகழ் அனைத்தும் அம்னோவால் கிடைத்தது எனும் போதும் அவர் அம்னோவை அழிக்க நினைத்தை அம்னோக்காரர்கள் மறக்கமாட்டார்கள் என Datuk Dr Akmal Saleh நினைவூட்டினார். உண்மையில் மலாய்க்காரர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என மகாதீர் நினைத்தால் அவர் தலைமையில் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் என்ன? மகாதீர் இன்னும் தலைமையில் இருக்கவே விரும்புகிறார். செயல்பட விரும்பும் யாராக இருந்தாலும் தலைமையைப் பெற முயற்சிக்கமாட்டார்கள். இருந்தாலும் மகாதிரின் இந்த முன்னெடுப்பு என்பது சந்தேகத்திற்குரியது என்றும் அம்னோ இனியும் மகாதீரை நம்பாது என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Akmal Saleh திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Datuk Dr Akmal Saleh menyatakan bahawa usaha Tun Dr Mahathir untuk menyatukan orang Melayu diragui kerana sejarah beliau yang pernah berusaha menghancurkan UMNO. Akmal mempersoalkan logik untuk mempercayai Mahathir, sedangkan parti yang memperjuangkan hak Melayu iaitu UMNO pernah menjadi sasarannya. Tambahnya, UMNO tidak akan melupakan tindakan Mahathir sebelum ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *