இஸ்லாம் அல்லாதவர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை! மகாதீர் கிளப்பும் புது சர்ச்சை!
- Thinagaren Sanggaren
- 17 Aug, 2025
ஆகஸ்ட் 17,
இஸ்லாமியத் தலைவர் இஸ்லாம் அல்லாதவர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad கருத்து தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் இஸ்லாம் அல்லாதவர்களையும் அரவணைத்து அவர்களின் மேம்பாட்டுக்காகவும் செயல்படுகிறார். இதனால் இஸ்லாமியர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படையானச் சீரமைப்புகளை முழுமையாகச் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார்.
உதாரணமாக மலேசியாவில் இஸ்லாம் அல்லாதவர்களும் உள்ளனர். அவர்களின் நலனுக்காகவும் அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டியதாக உள்ளது. அதேவேளையில் இஸ்லாமியர்களில் குறிப்பிட்டவர்களுக்குத் திட்டங்களை வகுக்க முடியாத சூழல் ஏற்படுவதாக Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார். இது மலேசியாவில் மட்டுமல்ல அரசியல் நிலைத்தன்மைக்காக இஸ்லாமிய அல்லாதவர்களையும் ஆதரிக்கும் ஒரு சூழலில் இஸ்லாமியத் தலைவர்கள் தள்ளப்பட்டிருப்பதாக Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார்.
இஸ்லாமிய நாடுகள் இதனை உணர்ந்தால் மட்டுமே உலகளவில் வலுவான ஒரு சமூகமாக இஸ்லாமியர்கள் திகழ முடியும். அதைத் தான் மலேசியாவில் நான் இப்போது செய்து வருகிறேன். இஸ்லாம் அல்லாதவர்களை நான் ஒதுக்க நினைக்கவில்லை, மாறாக இஸ்லாமியர்கள் அனைவரும் பயனடைய வேண்டும், அதற்கு இஸ்லாம் அல்லாதவர்கள் தடையாக இருக்க கூடாது என விரும்புகிறேன் என Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



