எனக்கு எதுவும் தெரியாது! அடம்பிடித்த மகாதீர்!

top-news

ஏப்ரல் 3,

Putra Heights எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்துள்ளார். இந்த துயரச் சம்பவம் தனக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஆனால் இதில் நான் யாரையாவது குறை கூற வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என செய்தியாளர்களிடம் மகாதீர் தெரிவித்தார். 

வெடிப்புச் சம்பவத்திற்குச் சம்மந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும், ஆனால் தானாக் முன்வந்து ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவர்களை அடையாளம் காண வேண்டியது யாருடைய வேலையோ அவர்கள் வேலை செய்யாமல் சும்மா இருந்தால் எதுவும் நடக்காது, தீர்வும் கிடைக்காதது என மகாதீர் தெரிவித்தார். சம்மந்தப்பட்டுள்ள கட்டுமான நிறுவனமும் பெட்ரோனாஸ் நிறுவனமும் உரிய நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாகவும் ஆனால் அது வெற்று நம்பிக்கை என்றாலும் நம்பியாக வேண்டிய கட்டாயம் என்றும் மகாதீர் தெரிவித்தார். இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து நாம் எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் எனக்கு எதுவும் தெரியாது என்றும் Tun Dr Mahathir Mohamad தெரிவித்துள்ளார்.

Tun Dr Mahathir Mohamad menyatakan beliau tidak tahu mengenai insiden letupan paip gas di Putra Heights. Beliau menegaskan pihak bertanggungjawab harus dikenalpasti dan mengambil tindakan namun meragui ketelusan proses itu. Mahathir juga menolak untuk memberi komen lanjut mengenai kejadian tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *