மலேசியா என்பது மலாய்க்காரர்களின் நாடு! மலாய் பாரம்பரியத்தை மீறாதீர்! மகாதீர் எச்சரிக்கை!

top-news

ஜூலை 2,


மலாயா மலேசியாவாக அங்கீகரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இது மலாய்க்காரர்களின் நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என முன்னாள் பிரதமர் TUN DR MAHATHIR MOHAMAD தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதும் அப்போதைய மலாயா மலேசியா என பெயரிடப்பட்டது வெறும் பெயர் மாற்றத்திற்கானது மட்டுமல்ல அது மலாய்க்காரர்களின் ஆட்சி அதிகரத்தையும் பாரம்பரியத்தையும் நிலைநிறுத்தவும் தான் என்பதை இப்போதைய அரசாங்கம் உணர்ந்திருக்க வேண்டுமென TUN DR MAHATHIR MOHAMAD நினைவூட்டினார். 

மலாய்க்காரர்கள் பாரம்பரியத்துடன் வாழ வேண்டுமென நினைப்பவர்கள். ஆகையால் நாட்டின் சட்டமும் மலாய்க்காரர்களின் பாரம்பரியத்தை உள்வாங்கியும் மலாய்க்காரர்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென முன்னாள் பிரதமர் TUN DR MAHATHIR MOHAMAD வலியுறுத்தினார். ஆனால் சமீபகாலமாக மலாய்க்காரர்களின் பாரம்பரியத்தையும் மலாய்க்காரர்களின் உரிமையையும் கேள்விக்குறியாக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்படுவதால் பாரம்பரியத்திற்கு முன்னுரிமை வழங்கும் மலாய்க்காரர்களின் தேர்வு என்னவாக இருக்கும் என்பதைத் தம்மால் கணிக்க முடியவில்லை என்றும் இது சட்டமீறலுக்கு வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் TUN DR MAHATHIR MOHAMAD எச்சரிக்கை விடுத்தார்.


Tun Dr Mahathir Mohamad mengingatkan bahawa Malaysia diiktiraf sebagai negara Melayu dan perlembagaan diwujudkan untuk mengekalkan warisan Melayu. Beliau memberi amaran agar kerajaan tidak meluluskan undang-undang yang boleh mencabar hak dan tradisi orang Melayu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *