TRUMP மலேசியா வந்தால் அமைதி சீர்குலையும்! – அன்வாருக்கு மகாதீர் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 28,

அமேரிக்க அதிபர்  Donald Trump மலேசியாவுக்கு வருவதைப் பிரதமர் அன்வார் தற்காத்து பேசுவதால் மலேசியாவின் அமைதி சீர்குலையும் அபாயம் இருப்பதாக முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் பாலஸ்தீனிய போரில் அமேரிக்கா வெளிப்படையாகப் போர் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கி வருவதை Tun Dr Mahathir Mohamad நினைவூட்டினார். டோனால்ட் டிரம்பின் மலேசிய வருகைக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை Tun Dr Mahathir Mohamad சுட்டிக்காட்டினார். 

மலேசியாவின் தார்மீகப் பொறுப்பிலிருந்து அன்வார் விலகக்கூடாது என்றும் அப்படியே தவிர்க்க முடியாத நிலையில் மலேசியாவின் பொருளாதாரத்திற்கு அமேரிக்க அதிபர்  Donald Trump-இன் வருகை ஆதரவளிக்கும் என்றால் அன்வார் வெளிநாட்டில் டரம்பைச் சந்திப்பது மட்டுமே ஒரே தீர்வு என மகாதீ இன்று தெரிவித்துள்ளார். டிரம்ப் போன்ற ஒருவர், எவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்தாலும், மலேசியாவில் வரவேற்கப்படக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக Tun Dr Mahathir Mohamad நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *