அம்னோ செத்துவிட்டது! மலாய்க்காரர்களே பெர்சத்துவுக்கு வாருங்கள்! மகாதீர் அழைப்பு!

top-news

ஜூலை 3,


மலாய்க்காரர்களின் நம்பிக்கையை அம்னோ இழந்துவிட்டதாகவும் அம்னோவால் இனி எந்தவொரு பயனமில்லை என்பதால் அம்னோவிலிருந்து விலகி பெர்சத்துவுக்கு வரும்படி முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamed அழைப்பு விடுத்துள்ளார். அம்னோ அதன் அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. நான் கட்டியமைத்த அம்னோ தடம் மாறி பயணித்ததால் அம்னோ செத்துவிட்டதாக Tun Dr Mahathir Mohamed தெரிவித்தார். அம்னோ உறுப்பினர்களைப் பெர்சத்துவில் இணையும்படி நான் இதுவரையில் வலியுறுத்தியதில்லை. ஏனெனில் அம்னோவில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் துரோகிகள். துரோகிகளை வைத்து நான் என்ன செய்வது? ஆனால் இப்போது அழைக்கிறேன். அம்னோவிலிருந்து முழுமையாக வெளியேறி பெர்சத்துவில் இணையுங்கள் என Tun Dr Mahathir Mohamed வலியுறுத்தினார்.

அம்னோ அதன் அழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதனுடன் சேர்ந்து நீங்களும் அழிந்து விடாதீர்கள். பெர்சத்து மட்டுமே ஒரே தீர்வு. அம்னோவின் பலவீனத்தை மறைத்து ZAHID HAMIDI என்னால் தான் அம்னோ அழிந்ததாகத் தெரிவித்து வருகிறார். உண்மையில் நான் அம்னோவின் பொறுப்புகளிலிருந்து விலகியது அம்னோ தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததால் இப்போது அழிவின் விளிம்பில் அம்னோ இருக்கிறது. இனி அம்னோவை மீட்டெடுப்பது என்பது சாத்தியமில்லை என்பதால் அம்னோவில் இருக்கும் திறமையான உறுப்பினர்கள் பெர்சத்துவில் இணைந்து மலாய்க்காரர்களின் உரிமையை நிலைநிறுத்தும்படியும் இது அம்னோவினருக்குத் தாம் வழங்கும் இறுதி வாய்ப்பு என்றும் Tun Dr Mahathir Mohamed தெரிவித்தார்.


Tun Dr Mahathir Mohamad mendakwa UMNO sudah hilang nyawa politiknya kerana gagal menjaga kepercayaan orang Melayu. Beliau mengajak ahli UMNO keluar sepenuhnya dan menyertai Parti Bersatu demi memperkukuh hak orang Melayu dan menjamin masa depan politik mereka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *