ஆட்சியும் அதிகாரமும் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே! – மகாதீர் சூளுரை!

top-news
FREE WEBSITE AD

ஜுலை 18,

விருப்பு வெறுப்புகளைக் கடந்து மலாய்க்காரர்கள் ஒரே அமைப்பாகச் செயல்பட்டால் ஆட்சி அதிகாரம் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே என்பது உறுதியாகும் என முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதைய அன்வார் தலைமையிலான ஆட்சி என்பது மலாய்க்காரர்களுக்கு எதிராக இருப்பதால் அன்வாரைப் பதவியிலிருந்து தூக்கி எறிய மலாய்க்காரர்கள் ஒரே நிலைப்பாட்டில் ஒரே அரசியல் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும் என Tun Dr Mahathir Mohamad வலியுறுத்தினார். 

நேற்று கெடா அலோர் ஸ்டாரில் நடைபெற்ற மலாய்க்காரர்கள் ஒன்றுக்கூடல் மாநாட்டில் பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin, பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang, எதிர்க்கட்சித் தலைவர் Datuk Seri Hamzah Zainudin கெடா மாநில மெந்திரி பெசார் Datuk Seri Muhammad Sanusi Md Nor  ஆகியோர் பங்கேற்றனர். அம்னோவை அதன் கொள்கையைக் கைவிட்டு ஆட்சிக்காகக் கையேந்தும் நிலை ஏற்பட்டதால் இப்போது மலாய்க்காரர்கள் அதிகாரத்தையும் ஆட்சியையும் உரிமையையும் இழந்து விட்டதாக Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார். இனியும் இவர்களைப் போன்ற போலி மலாய்க்காரர்களை நம்பி எந்தவொரு பயனும் இல்லை என்பதால் ஆட்சியும் அதிகாரமும் மலாய்க்காரர்களின் கைகளில் மட்டுமே இருக்க மலாய்க்காரர்கள் ஒரே அணியாகப் பெரிக்காத்தானுக்கு ஆதரவளிக்க வேண்டுமென Tun Dr Mahathir Mohamad நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *