இந்து கோயில்களை அவமதித்தவர்களுடன் ஒரே மேசையில் கலந்துரையாடலா? இந்து சங்கம் கண்டனம்!
- THINAGAREN SANGGAREN
- 19 Mar, 2026
மார்ச் 19,
அண்மையில் இஸ்லாமிய அமைப்புகளுடன் இந்துக்கள் சார்பாக ஒரு சில அங்கீகாரமற்ற இயக்கங்கள் நடத்திய சந்திப்பிற்கும் இந்து சங்கத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என இந்து சங்கத்தின் தேசிய தலைவர் GANESAN TANGAVELLU தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு கூட்டத்தில் இந்து சங்கமும் இந்து ஆலயங்களின் ஒருங்கிணைப்புக் குழுவும் பங்கேற்கவில்லை என GANESAN TANGAVELLU தெளிவுப்படுத்தினார். மேலும் அந்த சந்திப்பிற்கு மலேசிய இந்து சங்கமும் பெரும்பாலான இந்து இயக்கங்களும் பங்கேற்காத நிலையில் அந்த சந்திப்பு இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சந்திப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என GANESAN TANGAVELLU விளக்கமளித்தார்.
கோயில்களைப் பாதுகாக்க இந்து சங்கம் எந்தவொரு தரப்பையும் சந்திக்க தயாராக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து இந்து கோயில்களை அவமதித்தும், பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்ட அமைப்புகள் மன்னிப்புக் கூட கேட்காத அத்தகைய அமைப்புகளுடன் நாம் ஒரே மேசையில் அமர வேண்டுமா என இந்து சங்கத்தின் தேசிய தலைவர் GANESAN TANGAVELLU கேள்வி எழுப்பினார். நியாயமானப் பிரதிநிதிகளுடனுடம் கட்டமைக்கப்பட்ட தளத்தில் அதிகாரத்துவம் கொண்ட தலைமையுடன் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என GANESAN TANGAVELLU தெரிவித்தார்.
தற்போது கோயில்களுக்கு எதிராகச் செயல்படும் ஒரு சில தரப்பினர்களின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள 1800 ஆலயங்களையும் 200க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து NHTSC எனும் தேசிய இந்து ஆலயங்களின் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு கோயில்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இதில் அங்கம் பெற்றிருக்கும் எந்தவோர் இந்து இயக்கமும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என GANESAN TANGAVELLU விளக்கமளித்தார்.
இப்போதைய சூழலில் இந்து கோயில்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது இந்த கலந்துரையாடல் அவசியமானதாக இல்லை என்றும் தெளிவான அரசியல் முடிவும், கட்டமைக்கப்பட்ட செயல்திட்டமும் தான் இப்போது அவசியம் என்பதால் இந்து வழக்கறிஞர் மன்றத்தின் ஆலோசனையும் நாம் பெற்று செயல்பட்டு வரும் நிலையில் இந்துக்களைப் பிரதிநிதிப்பதாக ஒரு சில இயக்கங்கள் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் அவசியமற்றது என இந்து சங்கத்தின் தேசிய தலைவர் GANESAN TANGAVELLU தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
DINESWARANNAIR
Why has this organization remained silent whenever temple issues arise? Why has no action been taken in any of these situations? Now, you are asking whether we should sit down and talk. But instead of raising this question now, you should have spoken up when these temple issues first started. If you had done so earlier, there could have been discussions and possibly a solution by now. So many temple-related problems have happened across different states in this country. During all that time, what exactly was this organization doing?



