ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த சிறப்பு உயர் நீதிமன்றம்
- Tamil Malar (Reporter)
- 20 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 20-
நாட்டில் ஊழல் வழக்குகளை விரைவாகவும் திறம்படவும் விசாரிக்கும் நோக்கில், ஊழல் தொடர்பான வழக்குகள், சிறப்பு செஷன்ஸ் ஊழல் நீதிமன்றங்களில் இருந்து வரும் மேல்முறையீடுகளை விசாரிக்க ஒரு சிறப்பு உயர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டமாக, இந்த சிறப்பு உயர் நீதிமன்றம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் செயல்படத் தொடங்கும் என கூட்டாட்சி நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு, மலாயா தலைமை நீதிபதி டத்தோ ஹாஷிம் ஹம்சா, தலைமை நீதிபதி டத்தோ’ஸ்ரீ வான் அஹ்மத் பாரிட் வான் சாலே ஆகியோருக்கிடையிலான ஆலோசனைகளின் பின்னணியில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதித்து வருவதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதன் மூலம், விசாரணை காலம் குறைந்து, நீதித் தீர்ப்புகள் விரைவாக வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



