செப்பாங்கில் உரிமம் இல்லாத 10 வணிகக் கூடாரங்கள் பறிமுதல்!
- Thinagaren Sanggaren
- 23 Nov, 2025
நவம்பர் 23,
செப்பாங் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 10 வணிகக் கூடாரங்களைச் செப்பாங் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்குச் செப்பாங்கில் உள்ள Jalan Warisan Sentral சாலைகளில் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியதாகவும் இரவு 9 மணிக்குள் 10 வணிகக் கூடாரங்களையும் பறிமுதல் செய்திருப்பதாகச் செப்பாங் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தும் வகையில் சாலைகளை அபகரித்து வணிகக் கூடாரங்களை அமைத்திருந்த 9 வணிகக் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் உரிமம் இல்லாமல் சாலையோர நடை பாதைகளில் கூடாரங்களை அமைத்த வணிகர்களின் கூடாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் செப்பாங் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. தற்காலிக வணிகர்களுக்காக செப்பாங் நகராண்மைக் கழகம் சிறப்பு வணிக உரிமத்தை வழங்கி வருவதாகவும் வணிகர்களுக்காக வழங்கப்பட்ட பிரித்தியேகத் தலத்தைப் பயன்படுத்தும்படியும் செப்பாங் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



