தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றத்துடன் துணை அமைச்சர் யுனேஸ்வரன் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 28,

அரசு திட்டங்களின் மூலம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயனடைய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்திற்குத் ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் வலியுறுத்தினார். தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் பழனி சுப்பையா அவர்களையும் மன்றத்தின் துணைச் செயலாளர் சந்திரசேகரன் ராமையா ஆகியோரைச் சந்தித்த துணை அமைச்சர் யுனேஸ்வரன் கல்வியமைச்சு உட்பட பிற அமைச்சகங்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய, மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் கீழ் சிறப்பு பணிக்குழு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டால்
, மற்ற அமைச்சகங்களில் முன்னெடுக்கப்படும் மாணவர் நலத்திட்டங்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என்றும், இதன் மூலம் எந்த மாணவரும் அரசாங்க வாய்ப்புகளிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள் என்றும் துணை அமைச்சர் யுனேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளிலிருந்து திறமையான விளையாட்டு வீரர்கள்
, வீரங்கனைகளை அடையாளம் காண ஒரு விளையாட்டு குழு அமைப்பதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கும்படி யுனேஸ்வரன் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்திற்கு வலியுறுத்தினார். கல்வி தொடர்பான முக்கிய அம்சங்களாக ஆர்பிஎம் திட்டச் செயல்பாடு, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மலாய், ஆங்கில மொழிகளின் புலமை, தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட 8 முக்கிய அம்சங்கள் குறித்து மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் பழனி சுப்பையா துணை அமைச்சருக்கு விளக்கமளித்தார்.|

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *