RON95 மானிய மாற்றம்: 90 விழுக்காட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லை – சைபுடின் நசூதின்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 27-

RON95 எரிபொருள் குவாட்டா மாற்றம் நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என டத்தோ ஸ்ரீ சைபுடின் நசூதின் தெரிவித்தார்.

மலேசியாவில் சுமார் 90 சதவீத மக்கள் மாதத்திற்கு சுமார் 100 லிட்டர் அளவிலேயே RON95 பயன்படுத்துகின்றனர். இதனால், 10 பேரில் 9 பேரின் தினசரி வாழ்க்கை எந்த கூடுதல் செலவும் இல்லாமல் வழக்கம்போல தொடரும் என்றார்.

Pakatan Harapan கூட்டணியின் பொதுச் செயலாளரான அவர், BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குவாட்டா 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராக குறைக்கப்படுவது தற்காலிக நடவடிக்கையாகும் என்றும் விளக்கினார். இந்த மாற்றம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

உலகளாவிய சூழ்நிலை நிலைத்தன்மைக்கு திரும்பும் வரை மட்டுமே இந்த மாற்றம் அமலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், e-hailing ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான குவாட்டா மாதத்திற்கு 800 லிட்டராக மாற்றமின்றி தொடரும் என்றும் உறுதியளித்தார்.

இந்த அறிவிப்பு, எரிபொருள் செலவினம் குறித்து மக்கள் மத்தியில் எழுந்திருந்த கவலைகளை தணிக்கும் வகையில் வெளியாகியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *