சோம்பேறி மடானி அரசு! பாஸ் கட்சியின் Takiyuddin சாடல்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 7

பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்த மசோதாவை (RUU) நிறைவேற்றத் தவறியதற்கு மதானி அரசின் சோம்பேறித்தன்மே முக்கிய காரணம் என பாஸ் கட்சியின் பொதுசெயலாளர்  Takiyuddin Hassan கடுமையாக சாடினார். சட்டத்திருத்தம் செய்ய மக்களவை உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் எனும்போது அவர்களுடைய ஆதரவாளர்களை ஒருங்கிணைக்காமல் எதிர்கட்சியைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை என பாஸ் கட்சியின் பொதுசெயலாளர்  Takiyuddin Hassan தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் முழுவதும், பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு திட்டமும் அரசியலமைப்பின் பரந்த கட்டமைப்பிற்குள் ஆராயப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மதானி அரசு எங்கள் வலியுறுத்தலைப் ஏற்காமல் வாக்கெடுப்புக்கு தயாரானது. இறுதியில் 2 வாக்குகள் பற்றாக்குறையில் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. இதற்கும் எதிர்கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என பாஸ் கட்சியின் பொதுசெயலாளர்  Takiyuddin Hassan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *