உள்ளூர் தயாரிப்புகளை வலுப்படுத்திய Malaysia Brand Day 2026

top-news

கோலாலம்பூர், ஜன. 14-

 Malaysia Brand Day 2026 நிகழ்வு, தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னணி பிராண்டுகளின் கண்காட்சி, தலைமைத்துவ கலந்துரையாடல்கள், தொழில் மன்றங்கள், வணிக இணைப்பு,  திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கேரி ஈ (Carrie Ee) கூறுகையில், இந்த மேடை உள்ளூர் பிராண்டுகள் மீது நுகர்வோரின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், தொழில்முனைவோர்களை பிராண்டிங், புதுமை (innovation), அறிவுசார் சொத்துரிமை (intellectual property) ஆகிய துறைகளில் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது என்றார்.

“ஒரு நாட்டின் வளர்ச்சி பிராண்டு கட்டமைப்பிலிருந்து தொடங்குகிறது என்பதைக் கருத்தில் கொண்டே இந்த முயற்சி உருவாக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார். மேலும், “ஒரு பிராண்டு வளர்ந்தால், அந்த வணிகமும் வளர்கிறது. வணிகம் வளரும்போது, அதனால் குடும்பங்களும், இறுதியில் நாட்டின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடைகிறது,” என்றும் அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *