2026 உலக பெட்டான்க் போட்டி நடத்த மலேசியாவுக்கு வாய்ப்பு

top-news

செய்தி-வெற்றி மைந்தன்

2026 உலக பெட்டான்க் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமைக்கு மலேசியா அழைப்பு பெற்றுள்ளது. இந்த போட்டி செப்டம்பர் இறுதியில் நடைபெறவுள்ளது. மலேசியா பவுல்ஸ் விளையாட்டு சங்கத்தின் தற்காலிக தலைவர் சியா பான் செங், இந்த அழைப்பு மலேசியாவின் விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாகும் எனக் கூறியுள்ளார். இருப்பினும், இறுதிக் கருத்தை இளைஞர், விளையாட்டு அமைச்சுடன் இணைந்து கலந்தாலோசித்த பிறகே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இது மிகுந்த கௌரவமான வாய்ப்பு. மலேசியா இதுவரை உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியதில்லை. இது நம் விளையாட்டுத் துறைக்கு பெரிய முன்னேற்றமாக அமையும் என சியா பான் செங் கூறினார். இந்த 51ஆவது ஆண்கள் டிரிபிள்ஸ், பிரெசிஷன் ஷூட்டிங் போட்டி, ஆசியாவின் சிறந்த விளையாட்டரங்கங்களில் ஒன்றான கோலாலம்பூர் பெட்டான்க் அரேனாவில் நடைபெறலாம்.

இந்த அழைப்பு, தற்போது கோலாலம்பூரில் நடைபெறும் 6ஆவது ஆசிய பெட்டான்க் சாம்பியன்ஷிப் போட்டியின் போது அறிவிக்கப்பட்டது. 15 நாடுகளைச் சேர்ந்த 151 விளையாட்டர்கள் பங்கேற்கும் இந்த ஆசிய போட்டி, நவம்பர் 5 முதல் 10 வரை நடைபெறுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *