இந்து சங்கம் ஏன் கலந்து கொள்ளவில்லை - உமாகாந்தன் கேள்வி
- Surendran Sumdraraj
- 25 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 25-
1960களில் உதித்த பாரம்பரியம் கொண்ட மலேசிய இந்து சங்கம், 'Program Harmoni Madani' பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதது குறித்து புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் கேள்வி எழுப்பினார். ஆலய பிரச்சினைக்களுக்குச் சுமூகமான தீர்வை ஒட்டிய அந்தப் பேச்சுவார்த்தையில் இந்து சங்கம் கலந்திருக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
எதிர் புறத்தில் வந்திருந்த அனைவரும் நமது ஆலயங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தனர். நாம் முன்வைக்கின்ற ஒவ்வொரு கேள்விகளுக்கும் நமது ஆலயங்களின் விவரங்கள் அவர்கள் சேகரித்துள்ளனர். ஆனால் இந்நிலை, நமது ஆலயங்களின் முழு புள்ளி விவரமும் மலேசிய இந்து சங்கத்திடம் உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்வி குறி என உமாகாந்தன் தெரிவித்தார்.
மேலும், எதிர்தரப்பு கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்த தமக்கு இந்து சங்கம் நன்றி தெரிவிக்கும் வேண்டும் எனவும் புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் கூறினார். ஆலய தொடர்பான விவரங்களைக் கேட்கும் பொழுது 1960களில் இருந்து நடப்பில் உள்ள இந்து சங்கம் பதிலளிப்பதுதான் முறையாக இருந்திருக்கும். அதைவிடுத்து பேச்சுவார்த்தைக்கே வராமல் இருப்பது முறையாகாது எனவும் அவர் மேலும் சொன்னார்.
இதனிடையே, கோயில் விசேஷ காலங்களில் கலந்து கொண்டு மாலை, மரியாதை செய்யப்படும் அரசியல் தலைவர்களும் இந்த ஆலய விவகாரத்தில் சுமூகமான தீர்வைக் காண முற்பட வேண்டுமென உமாகாந்தன் கேட்டுக் கொண்டார்.
இன்று காலை, தலைநகரில் அமைந்துள்ள மெட்ராஸ் கபே உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



