தாய்லாந்து-கம்போடியா அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுக்க மலேசியா உறுதி

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், நவ. 11-

தாய்லாந்து, கம்போடியா இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்பாளராக மலேசியா செயல்பட்டு வருகிறது. இந்த அமைதி செயல்முறையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதில் மலேசியா உறுதியாக உள்ளது என்று மலேசிய படைவீரர்கள் தளபதி ஜெனரல் தான் ஸ்ரீ முகமட் நிசாம் ஜாபர் தெரிவித்தார்.

நாட்டின் படைவீரர்கள் தலைவராக பணியாற்றும் அவர்,  இந்த அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு, தாய்லாந்து, கம்போடியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதாகும். ஆசியானின் உறுப்பு நாடுகள், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதும், பிராந்திய அமைதியை உறுதிப்படுத்துவதும் நம் கடமையாகும் என்றார்.

இந்த அமைதி செயல்முறை, பல கட்டமைப்புகளை உள்ளடக்கியது என்பதால், இது தடைபடக்கூடாது என ஜெனரல் நிசாம் வலியுறுத்தினார். 2025 ஜூலை 28 அன்று கோலாலம்பூரில் கையெழுத்தானது. ஆனால், சமீபத்தில் தாய்லாந்து-கம்போடியா எல்லையில் வெடி சம்பவத்தில் இரு தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததால், தாய்லாந்து அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இருப்பினும், மலேசியா இந்த ஒப்பந்த செயல்முறையை தொடர்ந்து ஆதரிக்கிறது. ஆசியான் பாதுகாப்பு இணைப்பாளர் கண்காணிப்பு அணி அமைப்பதற்கான விவாதங்கள் நடந்து வருகின்றன. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *