மலேசியா ஏழை நாடு! வெளிநாடுகளின் முதலீடுகள் அவசியம்! - RAFIZI RAMLI!
- Thinagaren Sanggaren
- 13 Jul, 2025
ஜூலை 13,
மலேசியா செல்வமிக்க ஒரு நாடாக இருந்தால்
வெளிநாட்டு முதலீடுகளுக்குக் கட்டுப்பாடுகளை மலேசியா விதிக்கலாமே தவிர மலேசியா ஓர்
ஏழை நாடு என்பதால் வெளிநாடுகளுக்கான முதலீடுகளை மலேசியா வரவேற்க வேண்டும் என முன்னாள்
பொருளாதார அமைச்சர் DATUK SERI RAFIZI RAMLI தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த நஜீப் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள்
பெறுவதைக் கட்டுப்படுத்தியதால் ரிங்கிட் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதன் பின்னர் அடுத்த பொதுத்தேர்தல் 2018 க்குப் பிறகு அனைத்துலக முதலீட்டு
நிறுவனங்களை ஈர்க்க மலேசிய அரசு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான DATUK
SERI RAFIZI RAMLI நினைவூட்டினார்.
கோவிட் தொற்று காலத்தில் அனைத்துலக வணிகம்
முடங்கியதும் மலேசியாவின் பொருளாதாரமும் அனைத்துலகப் பொருளாதாரமும் மேலும் வீழ்ச்சியை
நோக்கி சென்றது. உண்மையில் 2022 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பெரும்பான்மை இல்லாத அரசியல்
கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைத்த போது உலக நாடுகள் மலேசியாவில் முதலீடுகளைச்
செய்ய தயக்கம் காட்டினர். அப்போது பொருளாதார அமைச்சராகப் பொறுப்பேற்ற நான் உலக நாடுகளின்
நம்பிக்கையைப் பெற பெரும் சவால்களை எதிர்நோக்கியிருந்தேன். உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்ற பின்னரே
மலேசியாவுக்குள் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வந்ததாக DATUK
SERI RAFIZI RAMLI விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



