குழந்தை அநாகரிக பொருள் வழக்கு: வங்களாதேஷ் நபரை அமெரிக்காவுக்கு ஒப்படைத்தது மலேசியா
- Surendran Sumdraraj
- 06 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 6-
குழந்தைகள் தொடர்பான அநாகரிக பொருட்களைத் தயாரித்தல் மற்றும் வைத்திருத்தல் குற்றச்சாட்டில் முன்பு குற்றம் சாட்டப்பட்டிருந்த வங்களாதேஷ் நபரை மலேசியா, அமெரிக்காவின் கூட்டாட்சி விசாரணை அமைப்பான எப்.பி.ஐ. (FBI)க்கு நேற்று முன்தினம் ஒப்படைத்துள்ளது.
இந்த தகவலை எப்.பி.ஐ. இயக்குநர் காஷ் படேல் தனது சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ (X) மூலம் வெளியிட்டார். 28 வயதான அந்த நபர் மலேசியாவில் இருந்து எப்.பி.ஐ. அங்கோரேஜ் பிரிவினரால் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
2022 ஆம் ஆண்டிலிருந்து பல குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வந்த அந்த நபர், சர்வதேச அளவில் செயல்பட்ட குழந்தைகள் பாலியல் சுரண்டல் வலையமைப்பை இயக்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறார்.
“எங்கள் கூட்டாண்மை அமைப்புகளுடன் இணைந்து, 2022 முதல் தேடப்பட்டு வந்த வங்களாதேஷ் நபரை கைது செய்துள்ளோம். அவர்மீது சர்வதேச குழந்தைகள் பாலியல் சுரண்டல் வலையமைப்பை இயக்கியதாக உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் உள்ளன,” என்று காஷ் படேல் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



