லஞ்சம் பெற்றதாக எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நால்வர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 27,

மலேசியா சிங்கப்பூர் எல்லை பகுதிகளைக் கடக்கும் ஆவணமற்ற வாகனங்களைச் சோதனையிலிருந்து தவிர்க்க லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் 4 அரசு அதிகாரிகள் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர். சம்மந்தப்பட்ட 4 அமலாக்க அதிகாரிகளையும் மேலதிக விசாரணைக்காக இன்று Johor Bahru உயர்நீதிமன்றம் 6 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 40 வயதுள்ள 4 குடிநுழைவுத் துறை சோதனை அதிகாரிகள் தெரிய வந்துள்ளது. கடந்த 6 மாதமாக மோட்டார் சைக்கிள்களுக்குத் தலா 200 ரிங்கிட்டும், கார்களுக்கு 500 ரிங்கிட்டும் லஞ்சமாகப் பெற்றதாக முதற்கட்ட விசாரணயில் தெரிய வந்துள்ளது. நேற்று காலை மலேசிய எல்லை பாதுகாப்பு அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்களிடமிருந்து 14 வெளிநாட்டுப் பாஸ்போர்ட்டுகளும் 4 கைத்தொலைப்பேசிகளும் 3,000 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *