மலேசியா சிங்கப்பூர் எல்லையை இலகுவாகக் கடக்க முயற்சி! - போக்குவரத்து அமைச்சு!
- Thina S
- 04 Oct, 2024
சிங்கப்பூர் மலேசியா இடையிலானப் போக்குவரத்தை இலகுவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் போக்குவரத்து அமைச்சர் ANTHONY loke தெரிவித்தார். நேற்று ஜொகூரில் உள்ள குடிநுழைவு போக்குவரத்து ஆணையத்தைப் பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சர் மலேசியர்கள் சிங்கப்பூருக்குச் செல்வதும், சிங்கப்பூரியர்கள் மலேசியாவுக்கு வருவதும் அதிகரித்து வரும் நிலையில் விரைவானச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இரு நாடுகளும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சோதனையில் ஈடுபடும் குடிநுழைவுத் துறையினர்கள் சவால்களை மேற்கொள்ள முக்கிய காரணமாக இருப்பது போக்குவரத்து நெரிசலும் போக்குவரத்துக்கான ஆவணங்களைச் சோதனையிடுவதில் எடுக்கும் அதிகமான நேரம் என்பதால் அதனை எளிமைப்படுத்துவதற்கான வழிகளைப் போக்குவரத்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகப் போக்குவரத்து அமைச்சர் ANTHONY loke தெரிவித்தார். எளிமையானப் போக்குவரத்துச் சோதனைகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளிடுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *