மலேசிய 23 வயதுக்குட்பட்ட கால்பந்து அணியின் ஆசிய கோப்பை கனவு தகர்ந்தது
- Tamil Malar (Reporter)
- 10 Sep, 2025
கோலாலம்பூர், செப். 11-
செய்தி-வெற்றி மைந்தன்
மலேசியாவின் 23 வயதுக்குட்பட்ட கால்பந்து அணியின்
மூன்று முறை தொடர்ச்சியாக ஆசிய கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் கனவு,
தாய்லாந்தின் தம்மாசாட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து
அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால்
தகர்ந்தது.
இந்தத் தோல்வியால், நபுஸி ஜைன் பயிற்சியின் கீழ்
செயல்பட்ட மலேசிய அணி, குழு எப்-இல்
மூன்றாவது இடத்துடன் தகுதிச் சுற்று பயணத்தை முடித்தது. மங்கோலியாவுக்கு எதிராக 7-0
என்ற கோல் கணக்கில் பெற்ற வெற்றியின் மூலம் அவர்கள் மொத்தம் மூன்று
புள்ளிகளைப் பெற்றனர்.
பதிவுகளின்படி, மலேசிய அணி 2018, 2022, 2024 ஆகிய மூன்று ஆசிய கோப்பை தொடர்களுக்குத் தகுதி பெற்றது. இதில் 2018 ஆம் ஆண்டு தொடரில்
காலிறுதி வரை முன்னேறியது அவர்களின் மிகச் சிறந்த சாதனையாகும்.
போட்டி நடைபெற்ற பகுதியில்
கனமழை காரணமாக ஆட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமானது. இதனால், மைதானம் சேறும் சகதியுமாக இருந்த
நிலையில், இரவு 10 மணிக்கு ஆட்டம்
தொடங்கியது.
மலேசிய அணியின்
இந்தத் தோல்வி, அவர்களின்
ஆசிய கோப்பை கனவை மீண்டும் ஒருமுறை தடைபடுத்தியுள்ளது. இருப்பினும், அணியின் முந்தைய சாதனைகள், இளம் வீரர்களின் திறமைகள்
எதிர்காலத்தில் மேலும் வெற்றிகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று
ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



