மலேசியா-ஐக்கிய அரபு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய திட்டங்கள்

top-news

கோலாலம்பூர், டிச.12-

மலேசியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் (UAE) பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இணக்கம் கண்டுள்ளன. இதற்காக பல புதிய திட்டங்களை இரு நாடுகளும் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

அபுதாபியில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது UAE பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் முகமட் முபாரக் பாதல் அல் மஸ்ரூயியுடன் அவர் சந்தித்துப் பேசினார். இதையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டது.

“தகவல் பகிர்வு, மனிதவள மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரஸ்பர நன்மை தரும் புதிய திட்டங்களை மேலும் வலுப்படுத்த இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தோம்” என்று காலிட் நோர்டின் கூறினார்.

குறிப்பாக, மலேசியா தனது கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக UAE-இன் கோவிந்த் (Gowind) வகுப்பு போர்க்கப்பல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முன்மொழிந்துள்ளது. இது மலேசியாவின் எதிர்கால கடலோரப் போர்க்கப்பல் திட்டமான LCS (Littoral Combat Ship) கப்பல்களை இயக்குவதற்கு முன்னரே தயார்படுத்த உதவும். ஏனெனில் இரு நாட்டுக் கப்பல்களும் ஒரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *